×

விண்கலம் அனுப்புவதற்கு ஆகும் செலவைக் குறைக்க லித்தியம் - கரியமில வாயுவில் இயங்கும் புதிய மின்கலம்!!

வேற்று கிரகங்களுக்கு விண்கலத்தை அனுப்புவதற்கான செலவையும், விண்கலத்தின் எடையையும் குறைக்கும் வகையில் புதிய லித்தியம் - கரியமில வாயு மின்கலம் இந்தியாவில் உருவாக்கப்படவிருக்கிறது.ஐதராபாத் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் இரசாயனப் பொறியியல் துறையின் இணைப் பேராசிரியராக உள்ள திரு சந்திரசேகர் ஷர்மா இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவார்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பாக இந்த ஆண்டுக்கான சுவர்ண ஜெயந்தி உதவித்தொகை பெற்றுள்ள அவர், இந்தியாவின் செவ்வாய் கிரக வளிமண்டலத்தில் இயங்கக்கூடிய லித்தியம் - கரியமில வாயு மின்கலத்தை அறிவியல் புரிதல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டின் துணையுடன் உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார்.

Tags : spacecraft , Spacecraft, battery
× RELATED இஸ்ரோ தகவல் இன்சாட் 3டிஎஸ் விண்கலம் பூமியை படம் எடுத்தது