×

கஜா புயலுக்கு பிறகு கோடியக்கரை வந்துள்ள வரித்தலை வாத்துகள்

வேதாரண்யம்: கஜா புயலுக்கு பிறகு கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வரித்தலை வாத்துக்கள் வந்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை சைபீரியா, ஈரான், ஈராக் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் 247 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இதில் 50 வகையான நிலப்பறவைகளும், 200 நீர்ப்பறவைகளும் ஆண்டு தோறும் சீசன் காலங்களில் வந்து செல்கிறது. உலகின் மிக உயரத்தில் பறக்கக்கூடிய பறவையினங்களுள் ஒன்றான வரித்தலை வாத்துக்கள் ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் இருந்து கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் வரும்.

கஜாப்புயல் காரணமாக கோடியக்கரை பகுதிக்கு வாராமல் இருந்த வரித்தலை வாத்துக்கள் மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்த வருடம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆயிரக்கணக்கில் வந்துள்ளது. கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு குளிர் காலத்தில் வரும் இந்த பறவைகள் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை இங்கு தங்கி ஹிமாலயன் மலைப்பகுதிக்கு சென்றுவிடும்.

சாம்பல் வெள்ளை நிறம் கலந்த நிறம் கொண்ட இந்த பறவைகள் பார்ப்பதற்கு அழகாக தோன்றும். மற்ற பறவைகளை ஒப்பிடும் பொழுது இந்த வரித்தலை வாத்துக்கள் அதிகளவில் ஆக்சிஜனை உட்கொள்ளும் திறன் கொண்டதாகவும், நீண்ட நேரம் பறக்கும் திறன் கொண்டது என சரணாலயத்திற்கு ஆய்விற்கு வந்த தஞ்சை சரக வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.

Tags : Hurricane Gaja , Gajah storm
× RELATED கஜா புயல் பாதிப்பு நிவாரணம் இன்னும்...