×

உதவி பொறியாளர்களுக்கான ஊதிய குறைப்பு முதல்வரின் மனசாட்சியற்ற செயல்: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

சென்னை: அரசு உதவிப்பொறியாளர்கள் ஊதிய குறைப்பு என்பது மனசாட்சியற்ற செயல் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தபிறகும் அரசு உதவிப் பொறியாளர்களுக்கான ஊதிய குறைப்பில் பழனிசாமி அரசு பிடிவாதம் காட்டுவது கொஞ்சமும் மனசாட்சி இல்லாத செயலாகும்.

அரசு எந்திரத்தின் பணிகளை தொடக்க நிலையில் தங்களின் தோள்களில் சுமந்து செயல்படும் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர்களுக்கு முதலமைச்சராக மட்டுமின்றி, அந்தத்துறைகளின் அமைச்சராகவும் இருக்கிற பழனிசாமி நேரடியாக இழைத்திருக்கிற மிகப்பெரிய அநீதியாகும்.

உலகத்தில் வேறெங்கும் நிகழாத கொடுமையாக ஊதிய உயர்வு கேட்டவர்களுக்கு ரூ.15,000 வரை ஊதியத்தைக் குறைத்து ஹிட்லரைவிட மோசமானவராக முதலமைச்சர் பழனிசாமி நடந்து கொண்டிருக்கிறார். இவ்வளவு கோரிக்கைகள் எழுந்த பிறகாவது இது குறித்த தமது முடிவை பழனிசாமி அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். அரசு உதவிப்பொறியாளர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு அடிப்படையில் ஊதிய விகிதத்தை திருத்தியமைத்து அறிவிக்கவேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Chief Minister ,act ,assistant engineers ,DTV Dinakaran , Chief Minister's unscrupulous act of slashing pay for assistant engineers: DTV
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...