×

ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணி கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம்

• முதல்வர் உத்தரவால் நடவடிக்கை
• பிப்.24ம் தேதி திறக்க முடிவு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க  கடந்த 2018ல் தமிழக அரசு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்தது. இதை தொடர்ந்து கடந்த 2018 மே மாதத்தில் கட்டுமான பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், பீனிக்ஸ் பறவை இறக்கை வடிவமைப்பு பணி நவம்பர் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து  ஜெயலலிதா நினைவு மண்டபத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவில் டிஜிட்டல்  வீடியோ காட்சி வைக்க ரூ.11.84 கோடியில் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், 2 மாதங்களுக்குள் பணியை முடித்து, ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி நினைவிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, பணிகளை கண்காணிக்க ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை மருத்துவ கட்டுமான பிரிவு கண்காணிப்பு பொறியாளர் பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பணியை கவனிக்க கூடுதலாக உதவி செயற்பொறியாளர்கள் நீலக்கண்ணன், விஜய் ஆனந்த், உதவி பொறியாளர்கள் சாந்தி, பார்த்திபன், கிரிதரன், இளநிலை பொறியாளர்கள் பார்த்தசாரதி, கல்யாணசுந்தரம், செல்வராஜ் ஆகிய 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Special officer ,memorial ,Jayalalithaa , Special officer appointed to oversee construction work of Jayalalithaa memorial
× RELATED காஞ்சிபுரம் அண்ணா நினைவு பூங்கா சீரமைப்பு