×

விவசாயிகளுக்காக களம் இறங்கிய முன்னாள் ராணுவ வீரர்கள்

* எல்லையில் குழந்தைகளுக்கு கல்வி கற்றுத்தரும் விவசாயிகள்
டெல்லி எல்லைகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாப் விவசாயிகள், தாங்கள் தங்கியுள்ள கூடாரங்களை தற்காலிக பள்ளிக்கூடங்களாக மாற்றி சேவையாற்றி வருகின்றனர். போராட்டக்களத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் குடிசைவாழ் குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதற்காக இநத ஏற்பாட்டினை செய்து அசத்தி வருகின்றனர். விவசாயிகளில் பலரும் பட்டதாரிகள் முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படித்தவர்கள் உள்ளனர். இவர்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்தின் போது, எல்லைப்பகுதிகளில் உள்ள குடிசைவாழ் குழந்தைகள் உணவுக்காக சுற்றித்திரிவதை கண்டு அவர்களுக்கு முதலில் உணவளித்த விவசாயிகள், பின்னர் பாடங்களை சொல்லித்தர துவங்கினர். தினமும் கல்வி கற்க வருவதாற்காக அந்த குழந்தைகளுக்கு உணவும், பழங்களும் வழங்கி ஊக்கமளித்தனர். தற்போது அந்த குாந்தைகள் தங்களது நண்பர்களையும் அழைத்து வருகின்றனர். இதனால் தினமும் சுமார் 60-70 குழந்தைகளுக்கு போராட்டக்களத்தில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் ஆனந்த்பூர் பிரிவு விவசாயிகள் கல்வி கற்றுத்தருகின்றனர்.

* விவசாயிகளுக்கு குவியும் உதவிகள்
400 படுக்கைகளுடன் தண்ணீர் புகாத கூடாரம், வெந்நீர் வசதியுடன் நடமாடும் குளியலறை, உடம்பு பிடித்து விட 25 மசாஜ் மெஷின், மணிக்கு 2000 சப்பாத்தி உருவாக்கும் அதிநவீன மெஷின், பீட்சா, சுண்டல், பாதாம், முந்திரி, பிஸ்தா என தொடர்ந்து நொறுக்குத்தீனி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், மாலையில் சுடச்சுட சமோசா, புதினா சட்னி என போராட்ட களத்தில் உள்ள விவசாயிகளுக்கு பல்வேறு வசதிகளியும் உணவுகளையும் குருத்வாரா கமிட்டிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நல்ல உள்ளம் கொண்ட தனியார்கள் அளித்து உற்சாகப்படுத்தி உள்ளனர். டிராக்டர்களில் இருந்து பேட்டரி மூலமாக மின்சாரம் எடுத்து வாஷிங் மெஷினை இயக்கி துணிகளை விவசாயிகள் தோய்த்துக் கொள்கின்றனர். செல்போன் சார்ஜ் செய்யவும் 100 வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் தகடு தொழில்நுட்பம் டிராக்டர் டிராலிகளில் பொருத்தப்பட்டு உள்ளது.

* அழிவுபாதைக்கு செல்ல மோடி அரசு அனுமதிக்கக்கூடாது
மத்திய அரசு தனது “ஈகோ” மற்றும் “பிடிவாதத்தை” விட்டுவிட்டு, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று டெல்லி நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார். சிங்கு எல்லைக்கு சென்ற அமைச்சர் ராய், இங்குள்ள விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளயைும் தங்களத கட்சியின் எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் செய்து வருகிறார்கள் என்றார். மேலும், நாடடிற்கு உணவளிக்கும் விவசாயிகளின் கோரிக்கைளை மத்திய அரசு உடனே ஏற்க வேண்டும். நாடு அழிவுபாதைக்கு செல்வதை மோடி அரசு அனுமதிக்கக்கூடாது என்றார்.


* வெவ்வேறு சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதா
ஒரே நேரத்தில் பல்வேறு விவசாய சங்கங்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், விவசாய சங்கங்களின் போராட்டத்தை நீர்த்து போக வைக்கும் இது போன்ற நடவடிக்கைகள் இனியும் தொடரக்கூடாது எனவும் மத்திய அரசை பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பாக செயல்படும் சன்யுக்த் கிசான் மோர்ச்சா எச்சரித்து உள்ளது.மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்தின் இணை செயலாளர் விவேக் அகர்வாலுக்கு கூட்டமைப்பு தலைவர் தர்ஷன் பால் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘மத்திய அரசு பரிந்துரை செய்த சில ஆலோசனைகளை விவசாய சங்கங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன என தகவல் வெளியாகிறது.

பல்வேறு சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி எதோ ஒரு சில சங்கங்கள் ஏற்றுக் கொண்டதை ஒட்டு மொத்த விவசாயிகளும் ஏற்றுக் கொண்டதாக தகவல் திரித்து வெளியிடப்படுகிறது. எங்களது கூட்டமைப்பு தான் இருப்பதிலேயே மிகவும் பெரியது. எனவே, பல்வேறு சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது, அதில் அரசு பரிந்துரையை அவர்கள் ஏற்றனர், போராட்டத்தில் இருந்து விவசாய சங்கங்கள் விலகல் எனும் தகவல்கள் இனியும் நீடிக்கக் கூடாது. எங்களது ஒரே நிபந்தனையை தெளிவாக கூறியுள்ளோம். அதிலிருந்து பின் வாங்கவும் மாட்டோம்’’, எனக் கூறியுள்ளார்.

* உச்ச நீதிமன்ற யோசனை நிராகரிப்பு
புதிய வேளாண் சட்டங்களால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை களையவும், சாலைகளில் முகாமிட்டுள்ள போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தவும் உச்ச நீதிமன்றம் யோசனை ஒன்றை தெரிவித்தது. இதன்படி, முட்டுக்கட்டைக்கு தீர்வு காண நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் யோசனையால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. அரசுடன் ஏற்கனவே 5சுற்றுப்பேச்சுக்கள் நீதிமன்றம் தெரிவித்த மாடலில் தான் நடைபெற்றது. ஆனாலும், தீர்வு கிடைக்கவில்லை. இந்த மூன்று சட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு முன்பாக, இதுபோன்ற குழுக்களை அரசு அமைத்திருக்க வேண்டும். எனவே, எங்கள் கோரிக்கை என்பது மூன்று வேளாண் சட்டங்களும் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தான் என்று விவசாய சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

* சில்லா எல்லையில் போலீஸ் குவிப்பு
சில்லா எல்லை முற்றிலும் முடக்கப்படும் என விவசாயிகள் சங்க கூட்டமைப்பு எச்சரித்தை அடுத்து அந்த எல்லையில் போலீஸ் படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஆக்கப்பட்டது. பல்லடுக்கு கான்கிரீட் மற்றும் இரும்பு தடுப்பு, ஜெர்சி தடைகள், கூடுதல் கண்காணிப்பு என சில்ல எல்லை நேற்று பெரும் பரபரப்பாக காணப்பட்டது. விவசாயிகள் சில்லா எல்லையில் அதிகம் திரளவில்லை என்றும், நிலைமை இயல்பாக காணப்பட்டது எனவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Ex-servicemen ,peasants , Ex-servicemen who landed on the field for the peasants
× RELATED இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8...