×

ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக லஞ்சம் நீதிமன்ற ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அலுவலராக பணிபுரிந்து வந்த மோகன கிருஷ்ணன் வேலை வாங்கி தருவதாக லஞ்சம் பெற்றதாக குமார் என்பவர் சென்னை லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்தார். சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டு  நிரூபிக்கப்படாததால் வழக்கிலிருந்து மோகன கிருஷ்ணனை விடுவித்து உத்தரவிட்டது. இதை  ரத்து செய்யக்கோரி அரசு தரப்பில்  உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.   இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணை வந்தது. அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கஸ்தூரி ரவிச்சந்திரன் ஆஜராகி குற்றம் சாட்டப்பட்ட மோகனகிருஷ்ணன் மீது ஏற்கனவே இதுபோன்ற இரண்டு நபர்கள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் மோகனகிருஷ்ணனை கட்டாய ஓய்வில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர் மீதான குற்றச்சாட்டு அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளதை சிறப்பு நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்று வாதிட்டார்.வழக்கை விசாரித்த நீதிபதி, வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட முன்னாள் நீதிமன்ற அலுவலருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்….

The post ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக லஞ்சம் நீதிமன்ற ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mohana Krishnan ,Chennai High Court ,
× RELATED தமிழ்நாட்டில் பெண்களின்...