விசிகட்சியினர் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மீஞ்சூரில் பஜாரில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் காட்டூர் கோபி ஆலோசனையின்படி  ஒன்றிய செயலாளர்கள் உமாபதி. வாசு ஒருங்கிணைப்பில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் நெடுஞ்செழியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிராகவும் வேளாண் சட்டங்களுக்கு துணை நிற்கும் தமிழக அரசுக்கு எதிராகவும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: