×

கள்ளக்குறிச்சி நகராட்சியில் பழுதடைந்து கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்: கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் நலன் கருதி ரூ.5 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த ஒரு ஆண்டாக இயந்திரத்தை பொருத்தாமல் பில் கலெக்சன் பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ளது. ஆனால் இந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மக்கள் செயல்பாட்டில் உள்ளது என்று அரசு கணக்கில் மட்டும் உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்த அலுவலகத்தில் பல்வேறு கூட்டங்கள் நடந்துள்ளது. பல அதிகாரிகளும் இந்த நகராட்சி அலுவலகத்திற்கு வந்து சென்றுள்ளனர். ஆனால் இதுநாள் வரை எந்த அதிகாரியு பழுதடைந்த நிலையில் கிடக்கும் சுத்திகரிப்பு இயந்திரத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர முன்வரவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதாவது பழுதாகிய லைட்டுகள் மற்றும் பழைய டயர்கள், பழைய பொருட்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள பகுதியில் சுத்திகரிப்பு இயந்திரம் பயன்படுத்தபடாமல் பாழடைந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் சுத்திகரிப்பு இயந்திரம் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாமல் உள்ளதால் அலுவலக பணியார்களுக்கு 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு குடிநீர் தினமும் வெயில் காலங்களில் 7 கேன் வாங்கி பயன்படுத்தி வந்தனர். தற்போது 5 கேன் 150 ரூபாய்க்கு வாங்கி வந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த குடிநீர் பொதுமக்களுக்கு சரிவர வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.

இதனால் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சுத்திகரிப்பு இயந்திரத்தை பொருத்தி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : drinking water treatment plant ,municipality ,Kallakurichi ,collector , Faulty drinking water treatment plant in Kallakurichi municipality: Will the collector take action?
× RELATED கமுதி அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு