×

நாங்க மானஸ்தன்: தேர்தல் வாக்குறுதிப்படி அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி: பீகார் அமைச்சரவை ஒப்புதல்.!!!

பாட்னா: பீகாரில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பீகார் சட்டமன்ற தேர்தலில் தங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்குவோம் என்று பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இந்த வாக்குறுதி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கொரோனாவுக்கான தடுப்பூசி இலவசம் என்பதை தேர்தல் வாக்குறுதியாக கொடுப்பது அபத்தமானது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.

இருப்பினும், இதற்கு ஆதரவாக முன்னாள் தேர்தல் அதிகாரிகள் பலர் கருத்தும் தெரிவித்தனர். இதற்கிடையே, 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில், முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றியது. பாஜ 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றன. தொடர்ந்து, 4வது முறையாக ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் பீகார் முதல்வராக கடந்த மாதம் 16-ம் தேதி பதவியேற்றார்.

இந்நிலையில், மீண்டும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதால், பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தபடி, பீகாரில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க அம்மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக பீகார் மாநில துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத் கூறுகையில், பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதான தேர்தல் வாக்குறுதியாக இருந்த இலவச கொரோனா தடுப்பூசி, மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவசமாக செலுத்த முடிவு செய்துள்ளோம்.

எங்கள் முடிவு அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் மாநில மக்களுக்கான ஒரு பெரிய பரிசு. பீகாரின் மிகப்பெரிய பலம் அதன் மனித வளமாகும். மேலும் உலகம் தொற்றுநோயுடன் போராடுகையில் அவர்கள் கொடிய நோயிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றார்.


Tags : Nanga Manasthan ,election ,Cabinet ,Bihar , Nanga Manasthan: Free corona vaccine for all as promised in the election: Bihar Cabinet approves. !!!
× RELATED மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.6ல் வெளியீடு