நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோ வெளியிட்ட விவகாரம்: நீதிபதி கர்ணன் தொடர்பாக வழக்கில் டி.ஜி.பி. திரிபாதி ஆஜர்..!

சென்னை: நீதிபதி கர்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் டி.ஜி.பி. திரிபாதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு எதிராகவும், அவதூறு வீடியோக்களை ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதில், கர்ணனை நேரடியாக விசாரணைக்கு அழைத்து, விசாரணை நடத்தப்பட்டதாகவும் இனிமேல் இதுபோன்ற வீடியோக்களை வெளியிட மாட்டேன் என்று அவர் உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தனர். இது குறித்து, தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோர் டிசம்பர் 7ம் தேதி நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க டி.ஜி.பி. திரிபாதி மற்றும் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

Related Stories:

>