கொரோனா நம்மைக் கடந்தொழியும் காலம் வரை வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது : கவிஞர் வைரமுத்து

சென்னை : சென்னை ஐஐடியில் கடந்த சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் கடந்த 9ம் தேதி 4 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 444 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 183 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது, இன்று மேலும் 8 மாணவர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கல்வி நிலையங்களில்கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவக் கண்மணிகள் நலம்பெற விழைகிறேன். சரியான மருந்து கண்டறியப்படும்வரை அல்லது கொரோனா நம்மைக் கடந்தொழியும் காலம்வரை வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது. இது உரியவர்களின் உரிய நடவடிக்கைக்காக” என்று பதிவிட்டுள்ளார் .

Related Stories:

>