துறையூர் அருகே சாலையின் நடுவே மின்கம்பம்: விபத்து பயத்தில் வாகன ஓட்டிகள்

துறையூர்: துறையூரை அடுத்த செங்காட்டுப்பட்டி காந்திபுரம் தெருவில் மேற்கு இந்திரா குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் சாலையின் நடுவே மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் நடுவே இருப்பதால் காற்று, மழை காலத்தில் மின்கம்பி அறுந்து கீழே விழுந்தால் உயிர் பலி ஏற்படும் அபாய சூழ்நிலையில் உள்ளது.

இது குறித்து பலமுறை துறையூர் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் அலட்சியத்தில் உள்ளனர். புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெறும் முன் மின்கம்கத்தை மாற்றி அமைக்க கோரியதற்கு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சாலையின் நடுவே மின்கம்பம் இருப்பதால் வாகனங்களில் பொருட்களை எடுத்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இரவு நேரத்தில் வரும் வாகனங்கள் மின் கம்பத்தின் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயநிலை உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் அச்சத்தில் கடக்க வேண்டியுள்ளது. எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்றி, மாற்றி அமைத்து தர வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories:

>