×

அரசு பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து..!! தனியார் பள்ளிகள் ஆன்லைனில் நடத்தலாம்; அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை: அரசு பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தனியார் பள்ளிகள் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தி கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார். கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த எட்டு மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பிற மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வையும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வையும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டது. பள்ளிகள் திறக்க தாமதமாவதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஈரோட்டில் அரசு விழாக்களில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பதாவது: அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பாடத்திட்டங்கள் 9ம் வகுப்பு வரை 50 சதவீதம், 10, 11, 12ம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : examination ,government schools ,Senkottayan ,schools , Half yearly examination canceled in government schools .. !! Private schools can run online; Interview with Minister Senkottayan
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்