×

நடிகை சஞ்சனாவுக்கு கிடைத்த நிலையில் ராகிணிக்கு ஏன் ஜாமீன் கிடைக்கவில்லை: பெற்றோர் அதிருப்தி

பெங்களூரு: சஞ்சனாவின் ஜாமீனை தொடர்ந்து பரப்பன அக்ரஹாராவில் உள்ள மகள் ராகிணிக்கு ஜாமீன் பெறுவது குறித்து அவரது பெற்றோர் சி.சி.பி இணை கமிஷனர் சந்தீப் பாட்டீலை கமிஷனர் அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். கன்னட திரையுலக போதை பொருள் வழக்கில் கைதான பிரபல நடிகைகள் சஞ்சனா, ராகிணி இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நடிகை  சஞ்சனாவிற்கு சமீபத்தில் உயர் நீதிமன்ற நிபந்தனை ஜாமீன் வழங்கியது. தற்போது வீட்டிற்கு செல்லாமல், தனியார் ரிசார்ட்டுகளில் தங்கியிருந்து ஓய்வு எடுத்து வருகிறார்.

 இந்நிலையில் நடிகை ராகிணியின் பெற்றோர் தனது மகளுக்கு மட்டும் ஏன் ஜாமீன் கிடைக்கவில்லை என்று ஆதங்கம் அடைந்துள்ளனர். சி.சி.பி விசாரணைக்கு மகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறி போலீசார்கள் ஏதேனும் முட்டுக்கட்டை போடுகின்றனரா என்பது குறித்து தெரிந்து கொள்ள முற்பட்டனர்.இதற்காக நேற்று காலை பெங்களூரு கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த ராகிணியின் தந்தை ராகேஷ் மற்றும் தாய் ரோஹினி ஆகியோர் சி.சி.பி இணை கமிஷனர் சந்தீப் பாட்டீலை சந்தித்து, மகள் ஜாமீன் குறித்து விசாரித்தனர். அதில் சஞ்சனாவும், ராகிணியும் ஒரே வழக்கில் கைதானவர்கள். அப்படியிருக்கையில் ராகிணிக்கு மட்டும் ஏன் ஜாமீன் வழங்க சி.சி.பி முட்டுக்கட்டை போடுகிறீர்கள். தற்போது ராகிணி விசாரணை எந்த கட்டத்தில் உள்ளது.

எப்பொழுது அவரது ஜாமீன் கிடைக்க வழிவகை ஏற்படும் என்று கேட்டறிந்தனர். அதற்கு சி.சி.பி போலீசார் தரப்பில், நடிகை சஞ்சனா, உடல் நலக்குறைவை காரணம் காட்டி ஜாமீன் பெற்றுள்ளார். மருத்துவ அறிக்கை வைத்து, நீதிபதி ஜாமீன் வழங்கினார். ஆனால் ராகிணிக்கு ஜாமீன் வழங்குவதற்கு முறையான காரணங்கள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. மேலும் சி.சி.பி விசாரணைக்கு அவர் தடையாக இருப்பார் என்ற சந்தேகத்திலும், அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் போனதாக கூறினர். இதை ஏற்ற ராகிணியின் பெற்றோர், வழக்கு தொடர்பான சாட்சிகளை மகள் அழிக்க முற்படமாட்டார். சி.சி.பி போலீசார் இந்த கோரிக்கையாக ஏற்று, அவருக்கு ஜாமீன் வழங்க வழிவகை செய்யும்படி கோரிக்கை மனு அளித்துவிட்டு, அங்கிருந்து கடந்து சென்றனர்.

Tags : Rakshini ,Sanjana , Actress Sanjana gets bail Why Rakini did not get bail: Parental dissatisfaction
× RELATED செட்டிகுளத்தில் மினி டிராக்டர் மோதி...