×

ரஜினியின் கட்சி பெயர் மக்கள் சேவை கட்சியா? தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தவரால் பரபரப்பு

சென்னை: மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்தின் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தில் மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியின் பெயர் பதிவாகியுள்ளது. இந்த கட்சிக்கு பாபா முத்திரையை சின்னமாக கேட்டதாகவும் ஆனால் ஆட்டோ சின்னமாக வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த கட்சி, ரஜினியின் அரசியல் கட்சியாகும் என நேற்று ஊடகங்களில் தகவல் பரவியது. ரஜினி தரப்பில்தான் இந்த பெயர் பதிவானதாக பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து விசாரித்தபோது, மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் கட்சியை பதிவு செய்தவர் ஏ.கே.ஆண்டனி ராஜா என்பவர் என தெரியவந்தது. இவர், ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி எனவும் கூறப்படுகிறது. இவர்தான் கட்சியின் பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சென்னை துறைமுகத்தில் கான்ட்ராக்டராக தொழில் செய்கிறார். இவருக்கு சொந்தமாக பல வீடுகள் உள்ளன. எர்ணாவூரிலும் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டின் முகவரியில்தான் கட்சியை பதிவு செய்துள்ளார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில், இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றம் விடுத்துள்ள அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை மேற்கோள்காட்டி, அதில்  இடம் பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள்  மன்றத்தினுடையது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  தலைமையிலிருந்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை ரஜினி மக்கள்  மன்றத்தினர் காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.


Tags : Rajini ,Service Party ,registrar ,Election Commission , Is Rajini's party name People's Service Party? Excitement by the registrar of the Election Commission
× RELATED பாரதியார் பல்கலையில் முன்னாள் மாணவர் சந்திப்பு