உபி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடும்: கெஜ்ரிவால் அறிவிப்பு

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி வரும் 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று அதன் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். அவர் நேற்று  ஆன்லைன் வழிய நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது உரையாற்றுகையில், அடுத்து வரவுவள்ள உபி மாநில சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று கூறினார்.

 இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:

உத்தரபிரதேச மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்  அங்குள்ள “ஊழல் தலைவர்கள்” மற்றும் அழுக்கு அரசியல் காரணங்களால் தடைபட்டுள்ளது. அதனால் தான் நேர்மையான அரசாங்கத்தை அமைக்க உபி மாநில மக்கள் விரும்புகிறார்கள். அதனை ஆம் ஆத்மி கட்சியால் மட்டுமே நிறைவேற்ற முடியும். டெல்லியில் உள்ள மொகல்லா கிளினிக்குகள், இலவச குடிநீர், மின்சாரம், மற்றும் சிறப்பான கல்வி, சுகாதாரம் ஊள்ளிட்ட துறைகளில் பங்களிப்பை செய்வது போன்று உபியில் மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், கடந்த காலங்களில் அமைந்த அரசுகள் இவற்றை செய்யத்தவறிவிட்டன.

ஒவ்வொரு பெரிய மற்றும் சிறிய வசதிகளுக்காக உ.பி. மக்கள் டெல்லிக்கு ஏன் பயணம் செய்கிறார்கள்? கான்பூரில் வசிக்கும் ஒரு குடும்பம் தங்கள் குழந்தையை ஒரு நல்ல கல்லூரிக்கு அனுப்ப வேண்டுமானால், அவர்கள் டெல்லிக்குத்தான்  அனுப்ப வேண்டிய நிலை உள்ளது.  கோரக்பூரில் வசிக்கும் ஒருவர்  தனது பெற்றோருக்கு நல்ல மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்று அவர் விரும்பினால் டெல்லிக்குத்தான்  வர வேண்டும். இந்த நிலை ஏன்?  உத்தரபிரதேச மக்கள் அம்மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியின் மீதும் நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கினர்.

ஆனால் இந்த கட்சிகள் “மக்களை முதுகில் குத்தியதை” திவர வேறெதையும் செய்யவில்லை.உத்தரப்பிரதேச அரசியலில் ஒரே ஒரு விஷயம் மட்டும் அங்கு இல்லை. அது நேர்மையும் நல்ல நோக்கமும் தான். இந்த இரண்டும் ஆம் ஆத்மி கட்சிக்கு உள்ளது. இந்த நேர்மையினால் தான் ஆம் ஆத்மி டெல்லியை மாற்றியுள்ளது.  எனவே,  வரும் 2022 ஆம் ஆண்டில் உபி மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும். உபியில் ஏற்கனவே அரசை அமைத்த கட்சிகள் அனைத்தும் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. மாறாக, அவர்கள் தங்களை வளமாக்கிக்கொண்டனர். நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உபி,  நாட்டின் மிக வளர்ந்தபெற்ற  மாநிலமாக மாற முடியவில்லையே? டெல்லியில் உள்ள சங்கம் விகார் பகுதியில் மொகல்லா கிளினிக் இருக்க முடியும் என்றால், உத்தரப்பிரதேசத்தில் கோமதி நகர் பகுதியில் மட்டும்  ஏன் இருக்கக்கூடாது? டெல்லியில் சிறந்த அரசு மருத்துவமனைகள் இருக்கிறது. ஆனால், நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் நிலைமை ஏன் மோசமாக உள்ளது?.

டெல்லி மக்கள் 24 மணி நேர மின்சாரம் பெற முடியுமானால், உ.பி. மக்கள் ஏன் நீண்ட நேரம் மின்வெட்டுக்கு உள்ளாக வேண்டும்? டெல்லி மக்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்க முடியுமானால், உ.பி. மக்கள்  மட்டும் ஏன் அதிக மின்சார கட்டணங்களை செலுத்த வேண்டும்? குழந்தைகள் இருந்தால் தனியார் பள்ளிகளுக்கு இணையாக டெல்லி அரசு பள்ளிகளில் தரமான கல்வியைப் பெற முடியும், உ.பி.யில் அரசு பள்ளிகளின் நிலை ஏன் மோசமாக உள்ளது. டெல்லி மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும், தங்கள் குழந்தைகள் ஒரு நல்ல கல்வி பெற வேண்டும், தங்கள் குடும்பங்கள் நல்ல சுகாதார சேவைகளைப் பெற வேண்டும், ஒரு நேர்மையான அரசாங்கம் வேண்டும் என்பதால் அவர்கள் மூன்று முறை ஆம் ஆத்மி கட்சியைத் தேர்ந்தெடுத்தனர். இவ்வாறு கூறினார்.

ஆம்ஆத்மியை விரும்புகிறார்கள்முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது:

ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு நான் மக்களிடம் வேண்டுகோள்  விடுக்கின்றேன். டெல்லியில் நடந்ததைப் போல மற்ற அரசியல் கட்சிகளையும்  நீங்கள் மறந்துவிடுவீர்கள். டெல்லியில் ஏஏபி தொடர்ந்து மூன்று முறை அரசை  அமைத்துள்ளது. டெல்லியில் வசிக்கும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பலர், ஆம்  ஆத்மி கட்சி உபியில் போட்டியிட வேண்டும் என்று கூறுகின்றனர். டெல்லியில்  வழங்கப்படும் அனைத்து சேவைகளும் உ.பி. யிலும் வழங்கப்பட வேண்டும் என்று  அவர்கள் விரும்புகிறார்கள். உத்தரபிரதேச மக்கள் ஏற்கனவே உள்ள கட்சிகளால்   சோர்வடைந்துவிட்டனர். அதனால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்கவும், உ.பி.யை  தங்கள் சொத்தாக கருதும் தலைவர்களை தோற்கடிக்கவும் முன்வருவார்கள். இவ்வாறு கூறினார்.

Related Stories:

>