×

திமுக இளைஞர் அணியில் மாவட்ட, பகுதி துணை அமைப்பாளர்கள் நியமனம்: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னை தென்மேற்கு மாவட்டம், மாவட்ட துணை அமைப்பாளர்கள் மற்றும் பகுதி துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக ஒப்புதலோடு சென்னை தென்மேற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் மற்றும் மயிலாப்பூர் கிழக்கு-மேற்கு பகுதி துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில், மாவட்ட துணை அமைப்பாளர்களாக செல்வகுமார்-அசோக் நகர், சீனிவாசன்-வடபழனி, இளஞ்செழியன்-மயிலாப்பூர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  மேலும், பகுதி துணை அமைப்பாளர்களாக மயிலாப்பூர் கிழக்கு பகுதிக்கு ராஜ்குமார், மயிலாப்பூர் மேற்கு பகுதிக்கு பாலாஜி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் அணி நிர்வாகிகளுடன் இவர்கள் இணைந்து பணியாற்றுவார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.



Tags : District ,Area Deputy Organizers ,DMK Youth Team ,Announcement ,Udayanithi Stalin , DMK Youth Team Secretary Udayanithi Stalin has announced the appointment of Chennai South West District, District Deputy Organizers and Area Deputy Organizers.
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...