பாமக நிர்வாகி பலியான விவகாரம் பஸ்சை எரித்தவர்கள் மீது வழக்கு

திருநின்றவூர்: பட்டாபிராம் அமுதூர்மேடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன்(42). பாமக மாநில இளைஞரணி துணை தலைவர். இவர் பட்டாபிராம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமுதூர்மேடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் கம்பெனி பஸ் மோதி பலியானார். இதனையடுத்து, டிரைவர் பஸ்சை நடுரோட்டில் விட்டு, விட்டு கம்பெனி ஊழியர்களுடன் இருந்து தப்பி ஓடினார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகேயனின் உறவினர்கள் பஸ்சை அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்தனர். இதில், பஸ் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது.

இந்த விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பஸ் டிரைவர் திருத்தணி, நெடுபரம், கீழ் காலனி தெருவை சேர்ந்த ரவி(45) என்பவரை நேற்று மதியம் கைது செய்தனர்.  மேலும், பஸ்சை எரித்தது தொடர்பாக உரிமையாளர் திருத்தணி, பெரியார் நகரை சேர்ந்த சுந்தரராஜன்(61) என்பவர் பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சை எரித்த 10க்கும் மேற்பட்டவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>