×

பிரிட்ஜ் வெடித்து வீடு தரைமட்டம் சிகிச்சை பலனின்றி இளம்பெண் சாவு

திருப்போரூர்: கேளம்பாக்கம் அய்யப்பன் தெரு சேர்ந்தவர் ரவி (35). இவரது மனைவி மோகனா (30). இவர்களது மகள் லேகா (4). நேற்று முன்தினம் காலை மோகனா, காபி போடுவதற்காக, பால் எடுக்க பிரிட்ஜை திறந்தார். அப்போது திடீரென பிரிட்ஜ் வெடித்தது. இதில் ரவி, மோகனா,  லேகா, ஆகியோர் படுகாயமடைந்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், 3 பேரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மோகனா, நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். ரவி, மகள் லேகாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி, கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Bridge , Bridge explodes and house floor level treatment fails teen death
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...