மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தில் 25 அலுவலக உதவியாளர் பணி: விண்ணப்பிக்க 31ம் தேதி கடைசி நாள்

சென்னை: சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில் காலியாக உள்ள 25 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நியமன அதிகாரி, சென்னை கூடுதல் இயக்குநர் (நிர்வாகம்) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 16ம் தேதி (இன்று) முதல், வருகிற 31ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம் ரூ.15,700 - 50,000 (லெவல்-1) வழங்கப்படும். 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். இப்பணிக்கான விண்ணப்பங்களை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது இந்த அலுவலகத்தில் நேரிடையாகவோ வந்து சமர்ப்பிக்கலாம். சென்னை மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். வருகிற 31ம் தேதி மாலை 5.45 மணி வரை கடைசி நாள் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>