உலகம் முழுவதும் 2.2 மில்லியன் ‘பாளோயர்ஸ்’ சிஇஓ-வுடன் ரகசிய ‘உறவு’ கிடைத்தது எனது பாக்கியம்: ஆபாச நடிகையின் கருத்தால் அதிரடியாக கணக்கு முடக்கம்

வாஷிங்டன்: உலகம் முழுவதும் 2.2 மில்லியன் ‘பாளோயர்ஸ்’ கொண்ட ஆபாச நடிகை, இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் சிஇஓ-வுடன் ரகசிய ‘உறவு’ கிடைத்தது எனது பாக்கியம் என்று கருத்து தெரிவித்ததால், அவரது கணக்கு அதிரடியாக முடக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆபாச திரைப்பட நடிகை கேந்திர சுந்தர்லேண்ட் (25). இவர், சமீபத்தில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஆடம் மொசெய்ரியுடன் தனக்கு ரகசிய ‘உறவு’  இருப்பதாக தெரிவித்தார்.  இதற்கு அவர் தெரிவிக்கும் காரணம் என்னவென்றால், தனது ஆபாச புகைப்படங்கள்  இன்ஸ்டாகிராமில் வெளியாவதற்கு அவர்தான் காரணம் என்றும், அதனால், தனக்கு  இந்த பாக்கியம் கிடைத்ததாகவும் கூறினார். இவரை இன்ஸ்டாகிராமில்  உலகம் முழுவதும் சுமார் 2.2 மில்லியன் பேர் பின்தொடர்ந்து (பாளோயர்ஸ்) வருகின்றனர். இருந்தும், இன்ஸ்டாகிராம் நிறுவனம், தற்போது கேந்திர சுந்தர்லேண்டின் இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கி உள்ளது.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சமூக ஊடகங்களில் நாம் அனைவரும் சுதந்திரமாக செயல்படுகிறோம். அதைத் தான் அனைவரும் விரும்புகிறோம். பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான பாகுபாட்டை தடுத்து நிறுத்த  வேண்டும். இதைத்தான் என்னை போன்றவர்கள் விரும்புகிறோம். ஆனால் எனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் வெளியிட்ட ஆபாச புகைப்படத்தால்  டிக்டாக்கில் முடக்கப்பட்டேன். எனது அனைத்து பதிவுகளும் பாலியல் தொழிலாளர்களின் நலனுக்காக இருந்தது. நான் அவர்களுக்காக குரல் கொடுக்கிறேன். எனது போராட்டத்தை தொடருவேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வருகிறார்கள். சில நேரங்களில் தவறுகள் நடந்துவிடுகின்றன. கேந்திர சுந்தர்லேண்ட்,  எங்களது கொள்கை விதிகளை மீறிவிட்டார். அதனால், இப்போது நாங்கள் அவர்களின் கணக்கை முடக்கிவிட்டோம். அவருக்கும் எங்கள் நிறுவன அதிகாரிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்றார். ஆனால், நியூயார்க் போஸ்ட் பத்திரிகைக்கு  கேந்திர சுந்தர்லேண்ட் அளித்த பேட்டியில், ‘எனது கணக்கு முடக்கப்பட்டதை பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது. இன்ஸ்டாகிராமின் தலைமை நிர்வாக அதிகாரி யார் என்று கூட எனக்குத் தெரியாது. எனது வாழ்க்கையில் அவரை நான்  சந்திக்கவில்லை’ என்று பதிலளித்துள்ளார்.

Related Stories:

>