×

அசாம் முதல்வராக பதவி ஏற்றுள்ள ஹிமந்த விஸ்வ சா்மாவுக்கு பிரதமர் மோடி ட்வீட்டரில் வாழ்த்து

அசாம்: அசாம் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தது. அசாம் மாநில பாஜக சட்டமன்ற குழு தலைவராக ஹிமந்த பிஸ்வ சர்மா நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து,  மாநில ஆளுநரை ஹிமந்த பிஸ்வ சர்மா நேற்று சந்தித்து தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்கினார். இதன்படி, நேற்று ஆட்சியமைக்குமாறு ஆளுநர் ஜகதீஷ் முகி, ஹிமந்த சர்மாவுக்கு அழைப்பு விடுத்தார்.ஹிமந்த பிஸ்வ சா்மா தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா ஸ்ரீமந்த சங்கரதேவா கலாஷேத்ராவில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெற்றது. முதல் அமைச்சராக ஹிமந்த பிஸ்வ சா்மாவுக்கு ஆளுநா் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பதவியேற்பு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் கலந்து கொண்டார். அசாம் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஹிமந்த விஸ்வ சா்மாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இன்று பதவி ஏற்ற, ஹிமந்த விஸ்வ மற்றும் இதர அமைச்சர்களுக்கு வாழ்த்துகள். அசாமின் வளர்ச்சிப் பயணத்துக்கு இந்த குழு உந்துதல் அளிக்கும் என்பதிலும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என்பதிலும் நான் உறுதியாக உள்ளேன் என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்….

The post அசாம் முதல்வராக பதவி ஏற்றுள்ள ஹிமந்த விஸ்வ சா்மாவுக்கு பிரதமர் மோடி ட்வீட்டரில் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Modi ,Himanth Viswa Samma ,Assam ,Chief Minister ,Himata Biswa ,President ,Assam State Bajaka Assembly Committee ,Himandha Viswa Samma ,Dinakaran ,
× RELATED பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் நரேந்திர மோடி..!!