×

நிலவின் பாறை துகள்களுடன் சீன விண்கலம் பூமிக்கு திரும்பியது!!

நிலவில் இருந்து பாறை துகள்கள், மண் உள்ளிட்ட மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வுகள் மேற்கொள்வதற்காக சீனா ‘சேஞ்ச்5’ என்ற விண்கலத்தை கடந்த மாதம் 24-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. டிசம்பர் 1-ல் நிலவின் மேற்பரப்பில் பத்திரமாக தரையிறங்கிய லேண்டர், அங்கு கற்கள்,மண் உள்ளிட்ட மாதிரிகளை சேகரித்தது. அதன்பின்னர் டிசம்பர் 3ம் தேதி புறப்பட்டு, நிலவை சுற்றிக் கொண்டிந்த விண்கலத்துடன் கடந்த வாரம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. அந்த விண்கலத்தில் இருந்த 4 என்ஜின்கள் 22 நிமிடங்களுக்கு இயக்கப்பட்டதில், அதன் சுற்றுவட்டப்பாதை பூமியை நோக்கி திரும்பியதாக சீன தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Tags : Chinese ,Earth ,moon , Moon, rock, particle, Chinese spacecraft
× RELATED இந்தியர்களின் உடல்நலத்தை கெடுத்து...