ஆந்திராவில் சோகம்!: தேவாலயத்திற்கு நடந்து சென்றவர்கள் மீது லாரி மோதி விபத்து..4 பேர் உயிரிழப்பு, 15 பேர் படுகாயம்..!!

தெலுங்கானா: ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றவர்கள் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். யர்ரகுண்ட்லா கிராமத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் அதிகாலை 4 மணியளவில் கர்னூல் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் தேவாலயத்துக்கு நடந்து சென்றார்கள். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சுரேகா, ஜான்சி, வம்சி, ஹர்ஷ்வர்தன் ஆகிய 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து ஆந்திர மாநில காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது,  யர்ரகுண்ட்லா கிராமத்தை சேர்ந்தவர்கள் அதிகாலையில் சர்ச்சுக்கு நடந்து சென்றனர்.

அப்போது அதிவேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்; பலர் பலத்த காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் நந்தியால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு நந்தியால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை பொதுமக்கள் உதவியுடன் துரத்தி சென்று பாட்டூலுறு அருகே மடக்கி நிறுத்தி ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவாலயத்துக்கு சென்றவர்கள் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories:

>