×

15 நாட்களுக்குள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 உயர்த்தியது மத்திய அரசு : ஒரு சிலிண்டர் ரூ.710-க்கு விற்பனை; இல்லத்தரசிகள் கண்ணீர்

சென்னை : நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்கள் (14.2 கிலே எடை) விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு மேல் கூடுதலாக தேவைப்பட்டால் மானியமில்லாமல் சந்தை விலைக்கு வாங்க வேண்டும். இந்நிலையில் மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை 50 ரூபாய் அளவிற்கு உயர்த்தப்படுவதாக இண்டேன் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 11 மாதங்கள் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயுசிலிண்டர் விலையை மாதம்தோறும் மாற்றி அமைத்து வரு கின்றன.கடந்த மார்ச் மாதம் கொரோனாவைரஸ் தொற்று காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பெருமளவு சரிந்தது.

 இதன் காரணமாக, கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைந்தது. பின்னர், ஜூன், ஜூலை மாதங்களில் விலை அதிகரித்தது. எனினும், கடந்த 2 மாதங்களாக சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.டிசம்பர் மாதத்துக்கான வீட்டு உபயோக சிலிண்டரின் விலை கடந்த 1ம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது.அதன்படி, சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.610-ல் இருந்து ரூ.660 ஆக உயர்ந்தது.

ஒரே மாதத்தில் 2வது முறை

இந்த நிலையில், ஒரே மாதத்தில் 2வது முறையாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் இன்று முதல் மானியமில்லாத கேஸ் சிலிண்டர் ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.710-க்கு விற்கப்பட உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக ரூ.100 கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.37 உயர்ந்து ரூ.1,330-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : government ,Housewives , Cooking, gas, cylinder, price, federal
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...