×

உறையவைக்கும் குளிர்..வியக்கவைக்கும் பனிசிற்பங்கள்..கண்கவர் வானவேடிக்கை!: சீனாவில் களைகட்டும் உலகின் பிரம்மாண்ட பனித்திருவிழா!

ஹார்பின்: சீனாவில் குளிர்காலம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹார்பின் நகரில் உள்ள உலகின் பிரம்மாண்ட பனித்திருவிழா களைக்கட்டியுள்ளது. உறையவைக்கும் குளிர். வியக்கவைக்கும் பனிசிற்பங்கள். கண்கவர் வாணவேடிக்கைகள். சீனாவில் குளிர்காலம் தொடங்கிவிட்டால் போதும் விழாக்களும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் களைகட்ட தொடங்கிவிடும். அந்த வரிசையில் ஹார்பின் நகரில் சீனா பனித்திருவிழா வான வேடிக்கைகளுடன் தொடங்கியுள்ளது. உறைந்த சோம்புவா நதிக்கரையில் இருந்து வெட்டி கொண்டுவரப்படும் ராட்சத பனிக்கட்டிகளை கொண்டு அழகிய பனிசிற்பங்கள் உருவாக்கப்பட்டு பனித்திருவிழாவில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. பாரம்பரிய சீன கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பல விதமான வடிவங்களில் செதுக்கப்பட்டுள்ள இந்த சிற்பங்களை குழந்தைகள் ரசிக்க தவறுவதில்லை.

30 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பனி பூங்காவாகவே உருமாறியிருக்கும் இந்த இடத்துக்கு இரவு நேரங்களில் ஒளிரும் வண்ண விளக்குகள், கூடுதல் அழகை சேர்க்கிறது. பனித்திருவிழாவை மேலும் களைகட்ட வைக்க பனிக்குளத்தில் நீச்சல் போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மேலும் ஒரு புதுமை சீன பனித்திருவிழாவில் அரங்கேறியுள்ளது. ஹார்பின் நகரிலேயே ஐஸ் சிட்டி என்ற பெயரில் பனி பூங்கா ஒன்றும் உருவாகி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் இணைந்து இந்த பூங்காவை கட்டமைத்து வருகின்றனர். பனித்திருவிழாவை கண்டுகளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் சீனாவுக்கு படையெடுத்து வருகின்றனர். சீனாவில் கொரோனா பரவல் ஓய்ந்துவிட்ட நிலையிலும், பனித்திருவிழாவில் பங்கேற்பவர்களின் பாதுகாப்பு கருதி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சீன அரசு எடுத்துள்ளது.


Tags : world ,China ,snow festival , Cold, snow sculptures, fireworks, China, snow festival
× RELATED சி ல் லி பா யி ன் ட்…