11 இடங்களில் பாமக போராட்டம்

பள்ளிப்பட்டு: கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி  இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் 11 இடங்களில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநில செயற்குழு உறுப்பினர் பா.விஜயன் தலைமையில்  கிராம நிர்வாக அலுவலகம் முன் செல்லாத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்.கே.பேட்டையில்  முன்னாள் மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமையில்  பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், அம்மையார்குப்பத்தில் என்.கே.புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட  பாமகவினர் கலந்துகொண்டு தனி இட ஒதுக்கீடு வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் 11 இடங்களில் பாமகவினர் ஆர்ப்

பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories:

>