டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

* போலீசாருடன் தள்ளுமுள்ளு

* 120 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் எம்.ஜி.ஆர் சிலை அருகே நேற்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட செயலாளர் அருள் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் செங்குட்டுவன், துளசிநாராயணன், மதிமுக மாவட்ட செயலாளர் டிஆர்ஆர்.செங்குட்டுவன், மாவட்ட நிர்வாகிகள்  பூவை மு.பாபு, ஆவடி ரா.அந்தரிதாஸ், நகர செயலாளர் கே.எம்.வேலு, எஸ்.ஆர்.மகேஷ்பாபு, தனஞ்செழியன், சிபிஐ கஜேந்திரன், சரவணன், சி.பி.எம். பா.சுந்தர்ராஜ், ராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

அப்போது போலீசார் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்திற்கு அனுமதி கிடையாது என கூறி அனைவரையும் கலைந்து போகுமாறு கூறினர். ஆனால் போராட்டக்காரர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகளுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது போலீசாரை கண்டித்து திடீரென சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது போலீசாருக்கும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும்  இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 18 பெண்கள் உட்பட 120 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.

Related Stories:

>