×

மும்பை தாக்குதல் தீவிரவாதிக்கு ஜாமீன் மறுப்பு

வாஷிங்டன்: கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் பலியானார்கள். இந்த சதித்திட்டத்தில் தொடர்புடைய அமெரிக்க குடியுரிமை கொண்ட டேவிட் கொல்மென் ஹெட்லி, உண்மையை ஒப்புக் கொண்டு அப்ரூவராக மாறினான். இதனால் ஹெட்லிக்கு 35 வருட தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சிறையில் உள்ளான்.

ஹெட்லியின் நெருங்கிய நண்பனான பாகிஸ்தானைச் சேர்ந்த தஹவுர் ரானாவும் இந்தியாவால் முக்கியக் குற்றவாளியாக இவ்வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தான். ரானாவுக்கு உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் இருமுறை மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும் ஜாமீன் மனு கோரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜாமீன் மனுவை ரத்து செய்ததுடன் ரானாவைத் தொடர்ந்து காவலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்தியாவிடம் ரானாவை ஒப்படைக்க இன்னும் கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறும் நீதிபதி கூறியுள்ளார்.


Tags : Mumbai ,attack militant , Mumbai attack militant denied bail
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...