சிதம்பரம் அண்ணாமலை மருத்துவ கல்லூரிக்கு அரசு கட்டணம்: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்த ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு 2013-14ம் ஆண்டில் அதிக கட்டணம் (ரூ.5.54 லட்சம்) தீர்மானிக்கப்பட்டது. இதன்படி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு ரூ.5,44,370 என தீர்மானிக்கப்பட்டது. இக்கட்டண உயர்வை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு உயர் நீதிமன்றம் தீர்மானிக்கும் கட்டணமே இறுதியானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு மருத்துவக் கல்லூரி தீர்மானிக்கும் கட்டணங்களையே இக்கல்லூரிக்கும் தீர்மானித்திட தமிழக அரசு உத்தரவு வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories:

>