தொகுதிக்கே வராததால் ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரனை காணவில்லை என போலீசில் புகார்

சென்னை: ஆர்கேநகர் தொகுதி எம்எல்ஏவை காணவில்லை என்று ஒருவர் போலீசில் கொடுத்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்கேநகர் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டு சுயேட்சையாக கடந்த 2017 ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அவர் தொகுதிக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் அதிமுகவினர் இருபது ரூபாய் நோட்டை காண்பித்து வெற்றி பெற்றதாக கூறி வந்தனர். இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருவது இல்லை. மக்கள் பிரச்னை வளர்ச்சி பணிகள் எதையும் இதுவரை செய்யவில்லை.

இந்நிலையில் கடந்த வாரம் ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவை காணவில்லை என்று போஸ்டர்கள் கொருக்குப்பேட்டை பகுதியில் ஒட்டப்பட்டிருந்தது. இப்படி இருந்த நிலையில் நேற்று மாலை கொருக்குப்பேட்டை சேர்ந்த ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் ஆர்கே நகர் காவல் நிலையத்தில் ஆர்.கே.நகரில் கடந்த 2017ம் ஆண்டு சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்ற டிடிவி தினகரன் தொகுதி பக்கமே வருவதில்லை. மக்களின் பிரச்னையை கண்டுகொள்வதில்லை .இதுவரை அவரை தொகுதியில் பார்க்கவே கிடையாது. எனவே அவரை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்திருந்தார். ஆர்கே நகர் போலீசார் புகாரை பெற்று உள்ளனர். புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அரசிடம் ஒப்படைப்பேன்.

Related Stories:

>