மங்களூரு துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு முதல் சரக்கு கப்பல் சென்றது

மங்களூரு: மங்களூரு துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு முதல் முறையாக நேற்று, காய்கனிகளுடன் சரக்கு கப்பல் புறப்பட்டு சென்றது.  கர்நாடக மாநிலத்தின் கடலோர பகுதியில் உள்ள மங்களூரு துறை முகத்தில் இருந்து உலகின் பல நாடுகளுக்கு சரக்கு கப்பல் இயக்கப்படுகிறது. ஆனால் தீவு நகரம் என்று போற்றப்படும் மாலத்தீவுக்கு இதுவரை கப்பல் சேவை இல்லாமல் இருந்தது. லட்சதீவு கடம்பத் கார் நிறுவனத்திற்கு சொந்தமான எம்எஸ்வி நூர் ஏ ஆல் கதரி என்ற பெயரிலான சரக்கு கப்பலை சரண்தாஸ் வி.கர்கெரே வாடகைக்கு எடுத்துள்ளார். அதில் முதல் முறையாக காய்கனிகள், விவசாயத்திற்கு பயன்படுத்தும் பசுமை உரம், ேதய்காய் நார், தேய்காய் ஓடுகள் ஆகியவற்றை கண்டெய்னர் மூலம் கப்பலில் நேற்று முன்தினம் முதல் நிரப்பினர். இதை தொடர்ந்து நேற்று கேப்டன் கண்ணன் தலைமையில் ஊழியர்கள் காத்தவராயன், சகாயம், சீனிவாசன், விக்னேஷ், ஹரிதாஸ் ஆகியோர் மாலத்தீவு புறப்பட்டு சென்றனர். மங்களூரு துறை முகத்தில் இருந்து முதல் முறையாக மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>