×

கூட்டணி ஆட்சியின் போது மேலவை தலைவர் பதவிக்கு ஆதரவு அளிக்கவில்லை: காங்கிரஸ் மீது குமாரசாமி குற்றச்சாட்டு

பெங்களூரு: கூட்டணி ஆட்சியின் போது மேலவை மூத்த உறுப்பினர் பசவராஜ்ெஹாரட்டிக்கு தலைவர் பதவி வழங்க காங்கிரஸ் ஆதரவு வழங்கவில்லை என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார். பெங்களூரு பத்மநாப நகரில் உள்ள முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா வீட்டில் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மேலவை உறுப்பினருமான சி.எம். இப்ராஹிமுடன் ஆலோசனை நடத்திய எச்.டி.குமாரசாமி பின்னர் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக கூறியதாவது:``மாநிலத்தில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு அமைந்த நேரத்தில் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்க மேலவை தலைவர் பதவியை மஜதவுக்கு விட்டுக்கொடுக்க பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அப்போது கூட்டணி தர்மம் கடைப்பிடிக்கவில்லை. அந்த சூழ்நிலை அப்போதே முடிந்தது. தற்போது புதியதாக ஒன்று ஆரம்பித்துள்ளது.

சி.எம். இப்ராஹிம் மறுபடியும் மஜதவுக்கு வருவதற்கு யோசித்துள்ளார். இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை அவரது வீட்டில் நடத்தப்பட்டது. தற்போது எச்.டி.தேவகவுடாவை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அவருடைய மனதில் சொந்த கட்சிக்கு வந்து கட்சி பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. நான் சி.எம். இப்ராஹிமை சந்தித்து பேசிய பின்னர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் அவரது வீட்டுக்கு சென்று வந்துள்ளனர். அவருடைய வீட்டின் விலாசத்தை தேடிக்கொண்டு சென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். மேலவை தலைவர் மீது கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து மஜதவின் நிலையை மூத்த உறுப்பினர் பசவராஜ்ஹொரட்டி தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

Tags : Coomaraswamy ,Congress ,upper house leader , Coomaraswamy blames Congress for not supporting upper house leader during coalition rule
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...