சிறுமிக்கு பாலியல் தொல்லை

மங்களூரு: தென்கனரா மங்களூரு மாவட்டம் சுளியா தாலுகா தேவசல்லா கிராமத்தில் வசித்து வருபவர் அனில். இவர் தனியார் பள்ளியில் சூப்ரவைசராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், கடந்த டிச. 10ம் தேதி தனது நண்பரின் மகளிடம் புதிய சைக்கிள் வாங்கி கொடுப்பதாகவும், சைக்கிளை மிதிப்பது எப்படி என்பது தொடர்பாக கற்று கொடுப்பதாக கூறியுள்ளார். அப்போது, அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து, நடந்த சம்பவத்தை சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். பள்ளி நிர்வாகம் அனிலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, சுப்ரமணியா போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அனிலிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>