ஸ்டார்க் வருகை: ஹேசல்வுட் மகிழ்ச்சி

சிட்னி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் பகலிரவு போட்டியாக வரும் 17ம் தேதி அடிலெய்ட்டில் தொடங்க உள்ளது. கடைசி 2 டி20 போட்டியில் விளையாடாமல் விலகிய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதல் டெஸ்ட் போட்டியில் இணையவுள்ளார். அவர் பகலிரவு போட்டியில் இணைந்துள்ளது அணிக்கு மிகப்பெரிய பலம் என்று சக பந்துவீச்சாளர் ஜோஷ் ஹாசல்வுட் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பகலிரவு போட்டியில் விராட்டிற்கு எதிரான பந்துவீச்சை முதலிலிருந்து ப்ரெஷ்ஷாக துவங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுவரை ஸ்டார்க் விளையாடியுள்ள 7 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் 43 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், இந்த போட்டியிலும் அவர் சிறப்பாக பந்துவீசுவார் என்று ஹாசல்வுட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories: