×

இந்தியாவில் மீண்டும் செயல்பட தொடங்கியது யூடியூப், ஜிமெயில்: முடங்கிய 5 மணி நேரத்தில் சரிசெய்த கூகுள் நிறுவனம்.!!!

சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய கூகுள் நிறுவனத்தின் யுடியூப், ஜிமெயில் ஆகியவை சீரானது. கூகுள் நிறுவனத்தின் யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் இன்று மதியத்தில் இருந்து திடீரென பாதிக்கப்பட்டன. இந்தியாவில் மாலையில் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பயனர்கள், தங்களால் மின்னஞ்சலை அனுப்பவோ, பெறவோ முடியவில்லை என்று சமூக ஊடகங்களில் பதிவிட ஆரம்பித்தள்ளனர். அதேபோல யூடியூப் தளத்தையும் பயன்படுத்த முடியவில்லை என்று ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் தகவல்கள் பகிர்ந்து வந்தனர்.

 குறிப்பாக, கூகுள் நிறுவனத்தின் யூடியூப், ஜிமெயில், கூகுள் ட்ரைவ், கூகுள் மீட், கூகுள் டாக்ஸ், கூகுள் அசிஸ்டன்ட் தொடங்கி முக்கிய சேவைகள் அனைத்துமே முடங்கின. இந்திய மணியளவில் சுமார் ஐந்து மணிக்கே பலருக்கும் கூகுளின் சேவை தடைப்பட்டிந்தது. இதனையடுத்து டுவிட்டரில் #GoogleDown #YouTubeDOWN #GoogleOutage என்ற ஹேஸ்டேக்குகள் உலகளவில் ட்ரெண்டிங் ஆனது. இது தொடர்பாக விளக்கம் அளித்த கூகுள், பிரச்னைகளை சரி செய்து வருகிறோம் என்று தெரிவித்தது.

இந்த நிலையில், ஜிமெயில், யூடியூப் சேவைகள் மீண்டும் வேலைசெய்ய தொடங்கியுள்ளன. மற்ற சேவைகளும் ஒவ்வொன்றாக சீரானது. சேவைகள் முடங்கிய போதும் Incognito Mode-ல் யூடியூப் வேலை செய்வதாக சிலர் குறிப்பிட்டிருந்தனர். இதனால் கூகுள் கணக்கு சார்ந்த எதோ விஷயத்தில்தான் சிக்கல் ஏற்பட்டிருக்கும் என கணிக்கப்படுகிறது. தொழில் நிறுவனங்கள் தொடங்கி தனிநபர்கள் வரை அனைத்து தரப்பினருமே கூகுளின் பண்பட்ட சேவைகளை நம்பியிருக்கின்றனர். அதனால் இதன் பாதிப்பு உலகமெங்கும் உணரப்பட்டிருக்கிறது. என்ன பிரச்னை என்பதற்கான விரிவான விளக்கத்தை கூகுள் கூடிய விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Google ,India , YouTube, Gmail resume operation: Google fixes paralysis in 5 hours. !!!
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!