×

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக புகார்: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்தது இலங்கைக் கடற்படை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லை தாண்டி தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க நுழைந்ததாக கூறி அந்நாட்டு கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைப்பதும், தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் நடைபெற்று வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் இலங்கை மீன்பிடி துறைமுகங்கள் அருகே உள்ள பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக பராமரிப்பு இன்றி இருப்பதால் பல விசைப் படகுகள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. படகுகளை விடுவிக்கக் கோரி தமிழக மீனவர்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ராமேஸ்வரம் கோட்டைபட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 5 விசைப்படகுகளில் 20 க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தொடர்ந்து, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். அத்துடன் மூன்று படகுகளும் அவர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை தமிழ் மீனவர்கள் கடற்படையிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்த நிலையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.


Tags : Sri Lankan ,fishermen ,Rameswaram , Sri Lankan navy arrests more than 20 fishermen in Rameswaram
× RELATED இலங்கை சிறையிலிருந்து...