இந்தி நடிகர் ஷாருக்கானுடன் நடித்த பாக். நடிகை மஹிரா கான்க்கு கொரோனா

புதுடெல்லி: பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானுடன் நடித்த பாகிஸ்தான் நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் நடிகை மஹிரா கான் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதில், ‘எனக்கு கொரோனா பாசிடிவ் உறுதியாகி உள்ளது. நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில நாட்களாக என்னுடன்  தொடர்பு கொண்டிருந்த அனைவருக்கும் தகவல் அளித்துள்ளேன். சவாலான இந்த நேரத்தில் தயவுசெய்து எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார். நடிகை மஹிரா கான், இந்திய திரைப்பட நடிகர் ஷாருக்கானுடன் ‘ரெய்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்த படப்பிடிப்பு முடித்தவுடன் அந்த படத்தை விளம்பரப்படுத்த அவர் இந்தியா வர திட்டமிடப்பட்டது. ஆனால், 2016ல் நடந்த யூரி தீவிரவாத தாக்குதலால் அவர் இந்தியா வரமுடியவில்லை. அவர் நடித்த ‘ரெய்ஸ்’ படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்தன. சமீபத்தில் இந்திய திரைப்பட நடிகர் ரன்பீர் கபூர் - மஹிரா கான் ஆகிய இருவரும் அமெரிக்காவில் சந்தித்த புகைப்படங்கள் வைரலாயின. அதில், அவர்கள் இருவரும் ஒன்றாக சிகரெட் புகைத்தனர். இந்த விவகாரம் பற்றிய செய்திகளும் தொடர்ந்து வந்தன. இருவரும் இதைப் பற்றி எதுவும் கூற மறுத்தவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>