×

ஃபைசர் தடுப்பு மருந்தை கொள்முதல் செய்ய இந்தியா தயக்கம்: விலை அதிகமாக இருப்பதால் யோசிப்பதாக தகவல்

டெல்லி: ஃபைசர் தடுப்பு மருந்தை கொள்முதல் செய்ய இந்திய அரசு தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே முதல் முறையாக இங்கிலாந்தில் கடந்த 8-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த மருந்துகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இந்தியாவில் அவசர தேவைக்காக தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்குமாறு ஃபைசர், பாரத் பயோடெக் மற்றும் சீரம் ஆகிய மூன்று நிறுவனங்கள் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளன.

இந்நிலையில் பிரிட்டனில் ஃபைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 24 மணி நேரத்தில் இருவருக்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட்டிருப்பது. இதனால் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்நிலையில் ஃபைசர் தடுப்பு மருந்தை கொள்முதல் செய்ய இந்திய அரசு தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகமான விலை, மைனஸ் 70 டிகிரியில் வைக்க வேண்டிய நிலை ஆகியவற்றால் ஃபைசரின் தடுப்பூசியை இந்தியா வாங்க தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறதாக கூறப்படுகிறது. மேலும் 5 நாடுகளில் அவசரகால அனுமதிக்கான ஒப்புதலை பெற்றுள்ள இந்த தடுப்பூசியை இந்தியா வாங்க வேண்டுமானால் ஊசி ஒன்றுக்கு 2,728 ரூபாய் கொடுக்க வேண்டும்.

அதே நேரம் இந்தியாவில் சீரம் இந்தியா நிறுவனத்தால் உருவாக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை 737 ரூபாய் மட்டுமே தேவை. அரசுகள் வாயிலாக மட்டுமே அந்தந்த நாடுகளுக்கு தடுப்பூசியை விற்க உள்ளதாக ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, குறைந்த விலைக்கு உள்நாட்டு தயாரிப்பு கிடைக்கும் நிலையில், அதிக விலை உள்ள ஃபைசரின் தடுப்பூசி இந்தியாவுக்கு வர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

Tags : India ,Pfizer , India reluctant to buy Pfizer vaccine
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...