×

மது விற்பனை என்பதே கொள்ளை அடிப்பதற்கு சமம் தான் : நீதிபதிகள் அதிரடி கருத்து

மதுரை : மதுவிற்பனை என்பதே கொள்ளை அடிப்பதற்கு சமம் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தஞ்சையைச் சேர்ந்த ராஜேஸ்வரி ப்ரியா உயர்நீதிமன்றக் கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் விலைக்கு மது விற்பனையை தடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, பெரும்பாலனவர்கள் கொள்ளையடித்த பணத்தை கொண்டே மது வாங்க வருகிறார்கள்.மதுவை கூடுதல் விலைக்கு விற்பது, மது வாங்க வருவோரிடமும் கொள்ளையடிப்பது போல் உள்ளது, என கருத்து தெரிவித்தனர்.

மேலும் தமிழகத்தில் மதுபான விலை நிர்ணயம் எதன் அடிப்படையில் செய்யப்படுகிறது? நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் விலைக்கு விற்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன ?எத்தனை நிறுவனங்களிடம் இருந்து தமிழக  அரசு எவ்வளவு மதுவை வாங்குகிறது? என நீதிபதிகள் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, மதுபான கடைகளில் நீதிபதிகளே நேரடியாக ஆய்வு செய்ய நேரிடும் என்று எச்சரித்த நீதிபதிகள், தமிழகத்தில் கடந்த  10 ஆண்டு மது விற்பனை லாபம், செலவின விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Tags : Alcohol Sale, Robbery, Equality, Judges, Action, Opinion
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...