கொடைக்கானல் மலைக்கிராம கோயில் திருவிழா: உடல் முழுக்க சேறு பூசி மக்கள் கொண்டாட்டம்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் உள்ள தாண்டிக்குடி கிராமத்தில் பட்டாளம்மன், முத்தாலம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.  15 நாட்கள் நடந்த இந்த திருவிழாவின் கடைசி நாளான நேற்று கரியமால் சுவாமிக்கு சேத்தாண்டி வேடம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான ஆண்கள், வயது வேறுபாடு இல்லாமல், ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசியும், சேற்றை தங்களது உடலில் பூசியும், சேத்தாண்டி வேடமிட்டும் ஊருக்குள் ஊர்வலமாக வந்து முத்தாலம்மனை வேண்டினர். மேலும், பல வகையான வண்ண பொடிகளை வீசி கொண்டாடினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘உடலில் சேறு பூசி வேண்டுவதால் விவசாயம் செழிக்கும். 200 ஆண்டுகளாக இந்த வேண்டுதல் நடந்து வருகிறது’’ என்றனர்.

Related Stories:

>