கேரளாவில் இலவச கொரோனா தடுப்பூசி: முதல்வர் பினராயி விஜயனின் அறிவிப்பு தேர்தல் விதிமீறலா?

திருவனந்தபுரம்: கேரளாவில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருப்பது தேர்தல் விதிமுறை மீறலாக கருதப்படுகிறது. கேரளாவில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதனால் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறும்போது, கேரளாவில் கொரோனா தடுப்பு ஊசி அனைவருக்கும் இலவசமாகவே வழங்கப்படும். யாரிடமும் இருந்து ஒரு நயா பைசா கூட கட்டணமாக வாங்கும் எண்ணம் அரசிற்கு இல்லை.

தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருந்த அரசு அதிகாரியை காப்பாற்ற கேரள அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தவறு ெசய்பவர்களை பாதுகாக்க மாட்டோம். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை கவிழ்க்க பாஜ முயல்கிறது.  தங்கம் கடத்தல் வழக்கில் மத்திய விசாரணை வேண்டும் என்று நான்தான் மத்திய அரசிற்கு கடிதம் எழுதினேன். ஆனால் மத்திய விசாரணை அமைப்புகளின் ேநாக்கம் புரிந்துவிட்டது. மத்திய விசாரணை அமைப்புகளை அவர்கள் இஷ்டம்போல் கேரளாவில் மேய அனுமதிக்க மாட்டோம். எனது கூடுதல் தனிச்சயலாளர் ரவீந்திரன் மீதான புகார்களில் உண்மை இல்லை என்றார்.

கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுமா? என்று மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை. மேலும் கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளபோது கேரள முதல்வரின் இலவச கொரோனா தடுப்பூசி அறிவிப்பு தேர்தல் விதிமீறலாக கருதப்படுகிறது.

Related Stories:

>