×

ஐஎஸ்எல் கால்பந்து; 2வது வெற்றியை பெறுமா சென்னையின் எப்சி?.. கவுகாத்தியுடன் இன்று மோதல்

கோவா: 11 அணிகள் இடையிலான 7வது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 25வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்சி-எப்.சி.கோவா அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த ஆட்டத்தில் 45வது நிமிடத்தில் கோவாவின் இகோர் அன்குலோ கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் 1-0 என கோவா முன்னிலை பெற்றது. 2வது பாதியில் ஒடிசா கடுமையாக போராடியும் கோல் அடிக்க முடியவிலை–்ல. இதனால் கோவா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 5வது போட்டியில் கோவா 2வது வெற்றியை பெற்றது. 2 டிரா,ஒரு தோல்வி என 8 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது. 5வது ஆட்டத்தில் ஒடிசா 4வது தோல்வியை சந்தித்தது.

இன்று 2 லீக் போட்டிகள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு சென்னையின் எப்சி.-கவுகாத்தி அணிகள் மோதுகின்றன. சென்னை 4 போட்டியில் ஒரு வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வி என 4 புள்ளிகளுடன் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. மறுபுறம் கவுகாத்தி 5 போட்டியில் 2 வெற்றி, 3 டிரா என தோல்வியை சந்திக்காமல் 9 புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் இதுவரை 12 போட்டிகளில் நேருக்குநேர் மோதி உள்ளன. இதில் 3ல் சென்னை, 6ல் கவுகாத்தி வென்றுள்ளன. 3 போட்டி டிராவில் முடிந்துள்ளது. இரவு 7.30 மணிக்கு நடக்கும் மற்றொரு லீக் போட்டியில், பெங்களூரு எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதுகின்றன.

Tags : ISL ,match ,Will Chennai FC ,Guwahati , ISL football; Will Chennai FC get the 2nd victory? .. clash with Guwahati today
× RELATED ஐஎஸ்எல் கால்பந்து நாக்-அவுட் ஒடிஷா-கேரளா இன்று பலப்பரீட்சை