×

வாரத்தில் 3 நாள் நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் இயக்கம்

நாகர்கோவில்: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு: வாரம் 3 முறை சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் தாம்பரம் மற்றும் நாகர்கோவில் சந்திப்பு இடையே வரும் 16ம் தேதி முதல் இயக்கப்பட இருக்கிறது. ரயில் எண்: 06065 தாம்பரம் - நாகர்கோவில் ஜங்ஷன் வாரம் மூன்று முறை சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து வரும் டிசம்பர் 16ம் தேதி முதல் ஞாயிறு, திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.

மறு மார்க்கத்தில் ரயில் எண் 06066 நாகர்கோவில் சந்திப்பு-தாம்பரம் வாரம் மூன்று முறை சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் நாகர்கோவில் சந்திப்பில் இருந்து டிசம்பர் 17ம் தேதி முதல் மாலை 4.15 மணிக்கு திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயிலுக்கு செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர் ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

Tags : Nagercoil - Tambaram , Nagercoil - Tambaram special train service 3 days a week
× RELATED நாகர்கோவில்-தாம்பரம் இடையே நாளை...