சென்னை விமானநிலையத்தில் பயணிகள் இல்லாததால் 3 விமானங்கள் ரத்து

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாததால் 3 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த விமானங்களில் செல்ல பதிவு செய்தவர்கள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.  

சென்னை மீனம்பாக்கம், உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 5.45 மணிக்கு கோவை செல்ல வேண்டிய விமானம், காலை 6.50 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய விமானம், காலை 8.30 மணிக்கு கோவையில் இருந்து சென்னை வரும் விமானம் ஆகியவை போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இவ்விமானங்களில் பயணிக்க ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள், வேறு விமானங்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories:

>