×

கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட 4,000 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..!

சென்னை: கொரோனா சிகிச்சை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட 4,000 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவில் வலியுறுத்தி உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றிய அரசு செவிலியர்கள் 4000 பேருக்குத் தற்காலிக பணிக்காலம் நிறைவடைய உள்ளது.

கொரோனா நோய்த் தொற்று அபாயம் முழுமையாக நீங்காத நிலையில், செவிலியர்களின் சேவை மருத்துவத்துறைக்கும் மக்களுக்கும் தேவை என்பதால் அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முகநூல் பதிவில் வலியுறுத்தி உள்ளார்.


Tags : nurses ,Corona ,MK Stalin , Corona, Nurses, Permanent, MK Stalin
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...