எமரால்டு அணை நீர்மட்டம் உயர்வு: கரையோர விவசாயிகள் மகிழ்ச்சி

ஊட்டி: எமரால்டு அணையில் இம்முறை தண்ணீர் நிறைந்து காணப்படுவதால், இதன்  கரையோரங்களில் விவசாயம் செய்து வருபர்களுக்கு தண்ணீர் பிரச்னை இருக்க வாய்ப்பில்லை. நீலகிரி மாவட்டத்தில் மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் அப்பர்பவானி, அவலாஞ்சி, பைக்காரா உள்ளிட்ட 12 பெரிய அணைகளும், 15க்கும் மேற்பட்ட சிறிய அணைகளும் உள்ளன. இந்த அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கொண்டு நீர் மின் நிலையங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர இந்த அணைகளின் கரையோரங்களில் பலர் விவசாயமும் செய்து வருகின்றனர். இந்த தண்ணீர் விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது.

இம்முறை கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், மின் தேவை மிகவும் குறைந்திருந்தது. இதானல், நீர் மின் உற்பத்தியும் அந்த காலக்கட்டத்தில் குறைக்கப்பட்டிருந்தது. மேலும், தொடர்ந்து மழையும் பெய்து வந்ததால், அணைகளில் தண்ணீர் இருப்பு குறையாமல் உள்ளன. பெரும்பாலான அணைகள் நிரம்பியே காணப்படுகிறது. ஊட்டி அருகேயுள்ள எமரால்டு அணையும் நிரம்பி காணப்படுகிறது. இதனால், இதன் கரையோரங்களில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு இம்முறை கோடை வரையில் தண்ணீர் பிரச்னை இருக்காது. குறிப்பாக, எமரால்டு, போர்த்தியாடா போன்ற பகுதிகளில் விவசாயம் யெ்து வரும் விவசாயிகளுக்கு தண்ணீர் பிரச்னை இருக்கு வாய்ப்பில்லை. அனைத்து அணைகளிலும் தண்ணீர் அளவு உயர்ந்துள்ளதால் கோடையில் மின் உற்பத்திக்கு பாதிப்பு இருக்காது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>