வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், 1000 கோடியில் நாடாளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க?: கமல்ஹாசன் கேள்வி..!

சென்னை: கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் நாடாளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? என்று பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். இந்தியாவில் உள்ள தற்போதைய நாடாளுமன்றத்தில் மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களும் அமருகிற வகையில் இருக்கை வசதிகள் உள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டிடம், எதிர்காலத்தில் இரு அவைகளையும் விரிவாக்கம் செய்ய வசதியாக மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமரத்தக்க வகையில் கட்டப்படுகிறது. புதிய கட்டிடத்தில், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் 1,224 உறுப்பினர்கள் பங்கேற்க முடியும்.

பிரதமர் மோடியின் ஆத்மநிர்பார் பாரத் எனும் சுயசார்பு இந்தியா என்ற திட்டத்தின்கீழ் இந்த புதிய கட்டுமானம் உருப்பெறவுள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினம் 2022-ம் ஆண்டில் கொண்டாடப்படும்போது அப்போதைய கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடக்கும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் கொரோனா பேரிடர் காலத்தில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு புதிய நாடாளுமன்றம் கட்ட முயற்சி செய்வது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் நாடாளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? என்று பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மன்னர்கள் மக்களைக் காக்கத்தான் சுவர் என்றார்கள் என அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>