×

கொரோனாவால் மூடப்பட்ட பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம் திறப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் முதலமட அருகே பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம் உள்ளது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் 10ம் தேதி இது மூடப்பட்டது. 8 மாதங்களுக்குப் பிறகு நேற்று முதல் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு திறக்கப்பட்டது. இங்கு சுற்றுலா பயணிகள் சென்று சுற்றிப் பார்க்க 10 சபாரி வேன்கள் உள்ளன. ஒரு சபாரி பயணம் 3.5 மணி நேரம் நீடிக்கும். மேலும், வனத்துறை அமைத்துள்ள கூடாரங்கள், மரக்குடில்களில் தங்க ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இந்த சரணாலயத்தை சுற்றிப் பார்க்க தகவல் மையத்தில் முன்பதிவு செய்வது கட்டாயம்.இங்கு தங்க விரும்புவோர் www.parambikulam.org என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.

* புள்ளிமான், மான், காட்டு எருமை மற்றும் யானை போன்ற விலங்குகளை கண்டு ரசிக்கலாம்.
* ஆசியாவின் மிக முக்கிய மரமான கன்னிமரா தேக்குகள் இங்கு அடர்ந்து காணப்படுகின்றன.
* பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் அணைகளும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன.

Tags : Opening ,Parambikulam Tiger Reserve ,Corona , Opening of Parambikulam Tiger Reserve closed by Corona
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு