ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

சென்னை: தி.நகர் தனியார் துணிக்கடை அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டி வந்தவர் ஜெகதீசன் (48). இவர், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் இருந்து பயணி ஒருவரை சவாரி ஏற்றிக்கொண்டு மூப்பரப்பன் தெரு வழியாக சென்றுள்ளார். அப்போது, அந்த தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடி மீது ஆட்டோ சக்கரம் ஏறியபோது, திடீரென மூடி உடைந்து ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஜெகதீசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் சென்ற பயணி, காயங்களுடன் தப்பினார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, ஜெகதீசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>